நிகழ்வுகள்

  • All Events
  • நாவற்­கு­ழி­யில் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை
நாவற்­கு­ழி­யில் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை
Oct21
நாவற்­கு­ழி­யில் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை
நாவற்­கு­ழி­யில் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை
நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது.விநா­யக வழி­பாட்­டு­டன் தவில் நாதஸ்­வர இசை­யு­டன், கருங்­கற்­க­ளில் பொறிக்­கப்­பட்ட 658 பாடல்­களை கொண்ட, 11 மொழி­க­ளில் மொழி பெயர்க்­கப்­பட்ட திரு­வா­ச­கப் பாடல்­களை உள்­ள­டக்­கிய அரண்­மனை விருந்­தி­னர்­க­ளால் திறந்து வைக்­கப்­பட்­டது.வாச­கம் பொறிக்­கப்­பட்ட அர­ணின் ஒவ்­வொரு தூண்­க­ளின் இடை வெளி­யி­லும் நான்கு சிவ­லிங்­கம் மற்­றும் நான்கு மணி­கள் வீதம் 108 சிவ­லிங்­க­மும் 108 மணி­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தட்­சணா மூர்த்­திக்கு அமைக்­கப்­பட்ட ஆல­யத்­தின் வழி­பாட்டை தொடர்ந்து 21 அடி­யில் தங்க முலாம் பூசப்­பட்ட பாம்­புச் சிவ­லிங்­கம் இருக்­கும், கருங்­கல்­லில் அமைக்­கப்­பட்ட தேர் திறந்து வைக்­கப்­பட்­டது. அரண்­மனை உரு­வாக்­கு­வ­தற்கு பல­வ­ழி­க­ளும் பாடு­பட்ட சிற்­பக்­க­லை­ஞர், கட்­ட­டக் கலை­ஞர், செப்பு வேலை கலை­ஞர், கருங்­கல் வேலைப்­பா­டுக் கலை­ஞர்­கள் பொன்­னாடை போர்த்தி பதக்­கம் வழங்கி மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.கருங்­கற்­க­ளால் பொறிக்­கப்­கப்­பட்ட எழுத்து வேலை­களை செய்­த­வர் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளின் பெயர்­களை கருங்­கல்­லில் பெயர் பொறிக்­கும் இளை­ஞன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. திரு­வா­சக அரண்­மனை நூலும் வெளி­யி­டப்­பட்­டது. இந்த நூலை சிவ­பூமி அறக்­கட்­ட­ளை­யின் பொரு­ளா­ளர் குக­தா­சன் வழங்கி வைக்க நல்லை ஆதீன முதல்­வர் பெற்­றுக்­கொண்­டார். நிகழ்­வில் விருந்­தி­னர்­க­ளாக ஆஸ்­தி­ரே­லியா மருத்­துவ நிபு­ணர் கலா­நிதி மன­மோ­கன் மருத்­துவ கலா­நிதி சிவ­கௌரி தம்­ப­தி­யி­னர், கொழும்பு மனித நேய அறக்­கட்­டளை தலை­வர் அபி­ராமி கயி­லா­ச­பிள்ளை, கம்­ப­வா­ரிதி இ.ஜெய­ராஜ், சிதம்­ப­ரம் அண்­ணா­மலை பல்­க­லைக் கழக பேரா­சி­யர் தி.பால­சந்­தர் தேசி­கர் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.
வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு

Oct21

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை

Oct21

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட

Oct21

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய

Oct21

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன

Oct21

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம

Oct21

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே

Oct21

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்

Oct21

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ

Oct21

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற

Oct21

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்

Oct21

சித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும

Oct21

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா