நிகழ்வுகள்

  • All Events
  • கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் இன்று
கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் இன்று
Oct21
கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் இன்று
கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் இன்று
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயம் ஆகியவற்றின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. ஆறுபடைவீடு கொண்ட திருமுருகனின் ஏழாவது படைவீடாகத் திகழ்வது கதிர்காமத் திருத்தலம். இது இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் உடையது.கதிர்காமம் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.கதிர்காமம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரைத் தலம்.இந்துக்கள்,பௌத்தர்களுக்குரிய புகழ் பெற்ற வழிபாட்டுத் தலம் இதுவாகும்.கதிர்காமம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரைத் தலம்.இந்துக்கள்,பௌத்தர்களுக்குரிய புகழ் பெற்ற வழிபாட்டுத் தலம் இதுவாகும். மூர்த்தி, தலம்,தீர்த்தம் என முச்சிறப்பு வாய்ந்த கதிர்காமத்திருத்தலம் இனமதபேதமற்று இந்துக்களும் பௌத்தர்களும் சங்கமிக்கும் புனித பூமியாகும். அதேவேளை வெளிநாட்டவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் திருத்தலமாகும்.கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இதேவேளை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மூன்று மலைக்கோயில்கள் உள்ளன. தாந்தாமலை சங்குமண்கண்டிமலை உகந்​தமலை ஆகியன இவையாகும்.இவற்றுள் மிகவும் தொன்மை வாய்ந்தது உகந்​தமலை.இது 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த திருத்தலம்.முருகனுக்கு உகந்த மலை உகந்​தமலை என்பர்.திரைச்சீலை திறக்காமல் பூசைகள் நடைபெறும் ஆலயம் இது. மலை உச்சியில்ஏழு வற்றாத நீர்ச்சுனைகள் இருப்பது இவ்வாலயத்திற்கு மேலும் வனப்பூட்டவதாக உள்ளது. இராவணன் பூகாரம்பம் செய்து பாவம் தீர்த்த ஆலயம் இது. இங்கு தலவிருட்சமாக வெள்ளைநாவல் மரம் உள்ளது. இது மலையடிவாரத்தில் உள்ளது.மட்டக்களப்பு கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் பாணமை ஊடாகச் சென்று பின்னர் வனத்தினூடாக 17கி.மீ. சென்றால் மனோரம்மியமான சூழலில் இயற்கையாக அமையப்பெற்றுள்ள உகந்​தமலையை அடையலாம். பொத்துவிலையடுத்துள்ள லகுகலை பிரதேச செயலாளர் பிரிவிலும் பாணமை பிரதேசசபை பிரிவிலும் உகந்​தமலை முருகனாலயம் அமைந்துள்ளது. கிழக்கே ஆர்ப்பரிக்கும் கடல் சூழ அடர்ந்த வனாந்தரம், நீர்நிலைகள் மத்தியில் கிறங்க வைக்கும் மலைத்தொடர்…தொடர்ந்து வீசும் தென்றல்.இத்தகைய மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள உகந்​தமலையில் வடிவேல் குன்றமும் நீர்ச்சுனைகளும் மக்களை கவர்ந்திழுக்கின்றன.குன்றம் எறிந்த குமரவேல் தனது உடல் பெருக்கி வாழ்வு உயர்த்திநின்ற அவுணகுல மன்னனை உரங்கிழித்தபின்னர் எறிந்த வேலானது பல்பொறிகளாகியதென்றும் மீண்டுவந்த அத்தகைய வேற்படைக்கதிர்களில் முதன்மையானது இங்கே (உகந்த) தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகின்றது. இன்று முதல் தொடர்ந்து 15நாட்கள் திருவிழா நடைபெறும்.15நாள் திருவிழாவின் பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.நேற்று வியாழக்கிழமை முதல் கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரின் அன்னதானம் ஆரம்பமாகியது என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார். இதன் தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசா பிரதித் தலைவர் ரி.குழந்தைவேல் செயலாளர் என்.பேரின்பநாயகம் பொருளாளர் எ.ஆனந்தராசா ஆகியோர் வழமை போல் அன்னதானம் வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.விழாக் காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும் அடியார்களுக்கான சகல வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதென்றும் ஆலயநிருவாகங்கள் தெரிவித்தன. கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்கும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கல்முனை டிப்போ அத்தியட்சகர் வெள்ளத்தம்பி ஜௌபர் தெரிவித்தார்.இதேவேளை கதிர்காமம் உற்சவத்திற்கென யாழ்ப்பாணத்திலிருந்து 56நாட்கள் பாதயாத்திரையிலீடுபட்ட வேல்சாமி தலைமையிலான குழுவினரும் மற்றும் 3000பேரும் நேற்று செல்லக்கதிர்காமம் வழியாக கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர். இதுஅவ்வாறிருக்க, இன்று உகந்தைமலை முருகன் ஆலய கொடியேற்றத்தின் பின்னர் காட்டுப்பாதையினூடாக கதிர்காமம் நோக்கி பாதயாத்திரையில் பயணிக்க அங்கு சுமார் 4000பேரளவில் தங்கியிருப்பதாக ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்துள்ளார் .
வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு

Oct21

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை

Oct21

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட

Oct21

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய

Oct21

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன

Oct21

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம

Oct21

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே

Oct21

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்

Oct21

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ

Oct21

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற

Oct21

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்

Oct21

சித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும

Oct21

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா